Posts

Showing posts from December, 2011

Press Release GDN for Pongal Programme

Image

நடிகை காவ்யாவின் இசை மழை

Image
சன் தொலைக்காட்சியில் பரப்பாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் முக்கியமானவை "திருமதி செல்வம்' மற்றும் "செல்லமே'. இவ்விரு தொடர்களிலும் நடித்து வருபவர் காவ்யா. மாறுபட்ட இரு வேறு பாத்திரங்களில் நடித்து வரும் காவ்யாவின் நடிப்பு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. அடிப்படையில் காவ்யா ஒரு பின்னணிப் பாடகியும் கூட. தொலைக்காட்சிகளில் காம்பியரிங் செய்து வந்தவர், ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஸ்டார்ஸ் கப்புள்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது அப்படியே தொடர்களில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். தற்போது அவருக்கு சின்னத்திரையில் வெற்றி பெற்றுள்ளபடியே வியாபாரம் செய்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையிருக்கிறதாம். இளங்கலை பட்டப்படிப்பில் பி.பி.ஏ. முடித்திருக்கும் இவரது இனிய குரலை பாரதி தமிழ்ச் சங்கம் பஹ்ரைன் இந்தியன் கிளப்பில் 13.01.2012 அன்று நடத்தவிருக்கும் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சியின்போது கேட்டு ரசிக்கலாம்.

பாரதி தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் கலை விழாவில் கலந்துக் கொள்ளும் "மாந்தன்" பட கதாநாயகி கன்னல்

Image

Daily Tribune Report 20.12.2011

Image

Pongal 2012

Image
Bharathi Association in co-ordination with The Indian Club is planning to celebrate “Pongal”, the Tamil Harvest Festival with pomp and vigour. The celebration will be a whole day event at The Indian Club on Friday the 13th January 2012 starting from 10 A.M. "Pongal" is a Thanks giving Harvest Festival celebrated every year in mid January all around the world by Tamilians to mark the harvest of crops and a special thanksgiving to God, the sun, the earth and the cattle. Tamilians draw kolams (Rangoli) on the door step, consume sugar cane, and prepare sweetened rice, milk and jaggery in new earthen pots. The 15th year annual event of The Bharathi Association is expected to attract more crowds this year. A series of Entertainment, Dance, Music, Adventurous Sports, Games and Fun activities have been lined up. Traditional Pongal Lunch with variety of vegetarian dishes served in Banana leaf, cooked with freshly harvested rice will be served to Members, Guests and Pass holders. ...

பொங்கல் 2012

Image
பாரதி தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும், 15-வது ஆண்டு பொங்கல் 2012 கலைவிழா நிகழ்ச்சி இம்முறை வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என சங்கத்தின் நிர்வாகக் குழுவினர் அறிவித்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் களைக்கட்ட துவங்கி விட்டன. எதிர்வரும் 13 ஜனவரி 2012 அன்று பஹ்ரைன் இந்தியன் கிளப்பில் காலை 10 மணி முதல் இரவு 11 மணிவரை தொடர்ந்து நடைபெறும். பொங்கல் சமையல் போட்டி, கோலப் போட்டி, சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான வீர விளையாட்டு போட்டிகள், பாரம்பரிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் காலையில் அரங்கேறும். பிற்பகல் மணிக்கு தலைவாழை இலையோடு 16-வகை அறுசுவை விருந்து உபசரிப்பு நடைபெறும். மாலையில் ஆடல் பாடலுடன் கூடிய மாபெரும் திரையிசை நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சியில் சின்னத்திரை, வண்ணத்திரை தாரகைகள் தமிழ் நெஞ்சங்களை மகிழ்விப்பார்கள். நடிகை கன்னல் தா‌ய்‌ கா‌ப்‌பி‌யம்‌ பட நி‌றுவனம்‌ சா‌ர்‌பி‌ல்‌ தமி‌ழரசன்‌ தயா‌ரி‌த்‌து, கதை‌, தி‌ரை‌க்‌கதை‌, வசனம்‌ எழுதி‌ இயக்‌கும்‌ ‌ "மா‌ந்‌தன்‌" படத்‌தி‌ன்‌ கதாநாயகி கன்னல் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்தும் பொங்கல் 2012 நிகழ்ச்சியில் ...

"திருமதி செல்வம்" புகழ் காவ்யா பங்குபெறும் மாபெரும் பொங்கல் கலை விழா

Image
சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் முக்கியமானவை "திருமதி செல்வம்' மற்றும் "செல்லமே". இவ்விரு தொடர்களிலும் நடித்து வருபவர் காவ்யா. மாறுபட்ட இரு வேறு பாத்திரங்களில் நடித்து வரும் காவ்யாவின் நடிப்பு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. அடிப்படையில் காவ்யா ஒரு பின்னணிப் பாடகியும் கூட. தொலைக்காட்சிகளில் காம்பியரிங் செய்து வந்தவர். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஸ்டார்ஸ் கப்புள்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது அப்படியே தொடர்களில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். சன் டிவியில் இரவுவேளையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு தொடர்களிலும் பெரும்பாலான ரசிகர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து வருபவர் காவ்யா. "திருமதி செல்வ'த்தில் ப்ரியாவாகவும், "செல்லமே' தொடரில் அஞ்சலியாகவும் வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவரும் காவ்யா பி.பி.ஏ. பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யவிருக்கும் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சியில் காவ்யா பங்குபெறவிருக்கிறார். நிகழ்ச்சிக்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக நடைபெற்று ...

BKS அறிக்கைக்கு கண்டனம்

Image
கடந்த சிலகாலமாக முல்லை பெரியார் அணை தொடர்பாக இந்தியா முழுவதும் சர்ச்சைகள் எழுந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இப்பிரச்சனை தொடர்பாக கடந்த 1.12.2011 பஹ்ரைனிலிருந்து வெளியாகும் Daily Tribune நாளிதழில், பஹ்ரைன் கேரளீய சமாஜத்தின் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் கேரள அரசுக்கு ஆதரவாக பஹ்ரைனில் கையெழுத்து இயக்கம் தொடங்கப் போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை பஹ்ரைனில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இங்கு சகோதரத்துவத்தோடு சுமூகமாக வாழ்ந்து வருகின்ற இந்தியர்களின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிப்பதாக இருந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும், கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையினுடைய உண்மை நிலை குறித்தும் தெளிவான அறிக்கையொன்றை பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முஹம்மது ஹுசைன் மாலிம் அவர்கள் அதே நாளிதழில் இன்று வெளியிட்ட அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.