Showing posts with label தமிழர் திருவிழா. Show all posts
Showing posts with label தமிழர் திருவிழா. Show all posts

Saturday, October 1, 2011

தமிழர் திருவிழா

தமிழர் திருவிழா




வரும் அக்டோபர் 7 முதல் 14-ஆம் தேதி வரை பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் இந்தியன் கிளைப்பில் நடத்தவிருக்கும் கோலாகல தமிழர் திருவிழாவின் ஆயத்த ஏற்பாடுகளுக்கு குறித்து 30-ஆம்தேதி வெள்ளிக்கிழமை சங்க உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர்கள் ஆவலுடன் பெருந்திரளாக கலந்துக் கொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தனர். சங்கத்தலைவர் முஹம்மது ஹீசைன் மாலிம் கூட்டத்தை தலைமை வகித்து ஏற்பாடுகள் குறித்து பேசினார்.தமிழர் பெருமைகளை பறைசாற்றும் வகையில் பிரமாண்டமான பாதாகைகள் (பேனர்) தமிழகத்திலிருந்து வருவித்து கண்காட்சி நடத்துவதென தீர்மானம் ஆனது.

நிகழ்ச்சி நிரல்களின் விவரங்களை சங்க நிர்வாகிகள் விவரித்தனர். சங்க உறுப்பினர்களின் பேரார்வமும், ஈடுபாடும் சங்கத்தினரை எழுச்சியடையச் செய்தது.

Tuesday, September 27, 2011

தமிழர் திருவிழா - துவக்கவிழா



பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருவிழா துவக்கவிழா நிகழ்ச்சியில் இலக்கியச் சித்தர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பஹ்ரைன் வருகை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்தேதி சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.

துவக்கவிழா பட்டிமன்ற நடுவராக கவிஞர் நந்தலாலா பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார்.

நாள் : 7.10.2011
இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்
நேரம் : மாலை 6.30 மணி

Sunday, September 25, 2011

பட்டிமன்றம்



பாரதி தமிழ்ச்சங்கம்
பெருமையுடன் வழங்கும்
தமிழர் திருவிழா

நாள் : 07.10.2011
இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்

பட்டிமன்றம்
தலைப்பு:
கணவன்மார்கள் சந்தோஷமாக இருப்பது விட்டிலா? வெளியிலா?
பட்டிமன்ற நடுவர் : கவிஞர் நந்தலாலா

கவிஞர் நந்தலாலாவைப் பற்றி சில வரிகள் :

கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர் என இலக்கிய தளத்திலும், சமூக தளத்திலும் தனது தடங்களை ஆழப்பதித்து வருபவர் கவிஞர் நந்தலாலா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை, இலக்கிய இரவுக்காக தமிழகம்தோறும் சென்று, தனது இனிய உரைவீச்சால் இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சங்களை வசீகரித்து வருபவர். இளங் கவிஞர்களை இனங்கண்டு அவர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்துவதையும், அவர்களின் கவிதைகளை மேற்கோள் களாகத் தனது உரையில் குறிப்பிட்டு அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதையும் ஒரு குறிக்கோளாகக் கொண்டுள்ளவர். நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டும் என்ற முனைப்போடு இலக்கியப்பணி ஆற்றி இரவுவலம் வருகிற கவிஞர்.

அவரெழுதிய கவிதையொன்றில் பெண்ணினத்தின் மீதுள்ள நியாயமான கோபத்தின் வெளிப்பாடு நாம் காண முடிகிறது.

"ஓ பெண்ணே!
நீ அரைத்து வைக்கும் மாவுகூட
அடுத்தநாள் பொங்கிவிடுகிறது
இத்தனை தலைமுறை கடந்தும்
நீ பொங்காதிருத்தல் என்ன நியாயம்?'


கலந்துக் கொள்பவர்கள் :

வெளியிலே .....

வித்யா சத்யன் ('அரட்டை அரங்கம்' புகழ்)
முகம்மது சலீம் ('பூதம் புதிது' நாடகப் புகழ்)
திருச்சி சரவணன் ('பூதம் புதிது' நாடகப் புகழ்)

வீட்டிலே ....

உம்முல் ஹஸனா (இலக்கிய ஆர்வலர்)
பிரேமலதா ('அரட்டை அரங்கம்' புகழ்)
கவிஞர் அப்துல் கையூம்


அனைவரும் வருக! ஆதரவு தருக!

Wednesday, September 21, 2011

கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி



பாரதி தமிழ்ச் சங்கம்
பெருமையுடன் வழங்கும்
கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி
நாள் : 8 அக்டோபர் 2011
இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்
நேரம் : மலை 7.00 மணி

வாய்ப்பாட்டு : திருமதி சங்கீதா ராம்பிரசாத்
மிருதங்கம்: திரு. கிருஷ்ணகுமார்
வயலின் : திருமதி அர்ச்சனா கிருஷ்ணகுமார்
மோர்சிங் : திரு பால கிருஷ்ணன் T.S.


Tamil Classical Music Concert by Sangeetha Ram Prasadat Indian Club
Time : 7.00 p.m.

About Sangeetha Ram Prasad :

She has 20 years of association in the divine art of Classical Carnatic music. Born in a family with a traditional carnatic music background she started learning vocal music from her mother Mrs Revathi Srinivasan, a graded Veena artist working with All India Radio, Chennai. Also, she learnt from her grand mother Chellam Rajagopalan who is also a Veena artist. She took her training initially from Mrs Rajalakshmi, student of Sangeetha Kalanaidhi Sri D.K. Jayaraman. Later, she took intensive training from her Guru Sangeetha Kalanidhi Sri T.M. Thyagarajan for 6 years.

She gave her first Sabha concert at Nugambakkam Cultural academy, Chennai in 1992. She has given many performances at temples, sabhas and marriages in Tamil Nadu including reputed sabhas such as The Music Academy, Kalarasana, Tamil Esai Mandram, Bhaktha Jana Sabha , Tirupathi Devasthanam, Nadha Inbam - Raga Sudha Hall etc.,

Being a resident in Bahrain, she has given many concerts organized by various club in Bahrain.

The classical concert will have all the popular composition and a large number of music lovers are expected for the event, She is accompanied by the Mirudangam on the stage played by Mr: Krishna kumar and Violin by Mrs : Archana Krishnakumar, Moorsing : Mr. Bala Krishnan T.S., all renewned music artistes.
Programme Co-Ordinator : Mr.Lakshmi Narasimhan