Showing posts with label Pongal 2012. Show all posts
Showing posts with label Pongal 2012. Show all posts
Monday, January 16, 2012
பஹ்ரைன் நாட்டில் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய மாபெரும் பொங்கல் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் மிகச் சிறந்த முறையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பஹ்ரைன் நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழர்களின் பண்பாட்டு மையமான பாரதி தமிழ்ச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை வருடந்தோறும் சீரும் சிறப்புமாக செய்து வருகிறது.
பஹ்ரைன் நாட்டில் கிட்டத்தட்ட 60,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் திரு.மோகன் குமார் அவர்கள் ஒரு தமிழர் என்பது பெருமைக்குரியதாகும்.
ஜனவரி 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை ஆதலால் பொங்கல் கொண்டாட்டம் இந்த தினத்தன்று கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
விடியற்காலை மகளிர் அணியினர் மாக்கோலம் இட வண்ணமயத்துடன் பெங்கல் விழா களைகட்டத் துவங்கியது. காலை 10 மணிக்கு இந்திய சங்கத்தின் திறந்தவெளி அரங்கத்தில் ஆண்களுக்கான வீர விளையாட்டுகள், குழந்தைகள் மற்றும் மகளிருக்கான போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் போன்றவை இடம் பெற்றன. பாரதி தமிழ்ச் சங்கத்தின் பெண் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கூட்டுப் பொங்கல் வைத்து, இறைவனை வழிபட்டு, குறவையிட்டு "பொங்கலோ பொங்கலென" குரலெழுப்பி தங்கள் மகிழ்ச்சியை ஆராவாரத்துடன் வெளிப்படுத்தினர்.
இந்தியத் தூதுவர் திரு.மோகன் குமார் அவர்களின் முன்னிலையில் இந்தச் சம்பிரதாயச் சடங்குகள் மற்றும் வைபவங்கள் நடந்தேறின. பஹ்ரைன் வாழ் இந்தியச் சமுதாயத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். பஹ்ரைன் நாட்டின் எட்டுதிக்கெங்கிலும், மற்றும் அண்டை நாடான சவுதி அரேபியாவிலிருந்த்தும் தமிழ் மக்கள் பெருந்திரளாக திரண்டு வந்து நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
மாலை 6.30 மணிக்கு "சென்னை ரிதம்" என்று பெயரிடப்பட்ட இசை நிகழ்ச்சி மேடையில் அரங்கேறியது. "திருமதி செல்வம்" மற்றும் "செல்லமே" புகழ் சின்னத்திரை தாரகை காவ்யா தனது இனிய குரலால் பாடியும் ஆடியும் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். "மாந்தன்" பட கதாநாயகி கன்னல், கலா மஸ்டரிடம் பயிற்சி பெற்ற சமீர், மற்றும் பஹ்ரைன் நடனக் கலைஞர் சுந்தர் இவர்களுடன் இணைந்து ஆடிய நடனங்கள் பலத்த கைத்தட்டலையும் கரகோஷத்தையும் பெற்றுத் தந்தது.
இசைக் கலைஞர் ரபீக் தலைமையில் வாத்தியக் கலைஞர்கள் இசைத்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பாடகர்கள் ஜாபர், மூவேந்தன், பாண்டியன், வர்மாவுடன் பாடகிகள் காவ்யா, ரெஜினா மற்றும் ஆஷா இணைந்து பாடி ரசிகப் பெருமக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். சந்த்தோஷ் அவர்களின் சிவாஜி நடிப்பு பாரட்டத்தக்கதாய் இருத்தது. ஏறக்குறைய 4,000 க்கும் மேற்பட்ட தமிழ் ரசிகர்கள் அலைகடலென திரண்டு வந்து அரங்கை நிரப்பினர்.
பஹ்ரைனில் அண்மையில் நடந்த விழாக்களிலே இது மிகப் பிரமாண்டமான விழாவாக பரவலாக பேசப்படுகிறது.
Thursday, January 5, 2012
Wednesday, December 28, 2011
Monday, December 26, 2011
நடிகை காவ்யாவின் இசை மழை
சன் தொலைக்காட்சியில் பரப்பாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் முக்கியமானவை "திருமதி செல்வம்' மற்றும் "செல்லமே'. இவ்விரு தொடர்களிலும் நடித்து வருபவர் காவ்யா. மாறுபட்ட இரு வேறு பாத்திரங்களில் நடித்து வரும் காவ்யாவின் நடிப்பு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. அடிப்படையில் காவ்யா ஒரு பின்னணிப் பாடகியும் கூட. தொலைக்காட்சிகளில் காம்பியரிங் செய்து வந்தவர், ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஸ்டார்ஸ் கப்புள்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது அப்படியே தொடர்களில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
தற்போது அவருக்கு சின்னத்திரையில் வெற்றி பெற்றுள்ளபடியே வியாபாரம் செய்தும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையிருக்கிறதாம். இளங்கலை பட்டப்படிப்பில் பி.பி.ஏ. முடித்திருக்கும் இவரது இனிய குரலை பாரதி தமிழ்ச் சங்கம் பஹ்ரைன் இந்தியன் கிளப்பில் 13.01.2012 அன்று நடத்தவிருக்கும் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சியின்போது கேட்டு ரசிக்கலாம்.
Tuesday, December 20, 2011
Wednesday, December 7, 2011
"திருமதி செல்வம்" புகழ் காவ்யா பங்குபெறும் மாபெரும் பொங்கல் கலை விழா
சன் தொலைக்காட்சியில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் தொடர்களில் முக்கியமானவை "திருமதி செல்வம்' மற்றும் "செல்லமே".
இவ்விரு தொடர்களிலும் நடித்து வருபவர் காவ்யா. மாறுபட்ட இரு வேறு பாத்திரங்களில் நடித்து வரும் காவ்யாவின் நடிப்பு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. அடிப்படையில் காவ்யா ஒரு பின்னணிப் பாடகியும் கூட. தொலைக்காட்சிகளில் காம்பியரிங் செய்து வந்தவர். ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஸ்டார்ஸ் கப்புள்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது அப்படியே தொடர்களில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்.
சன் டிவியில் இரவுவேளையில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு தொடர்களிலும் பெரும்பாலான ரசிகர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து வருபவர் காவ்யா. "திருமதி செல்வ'த்தில் ப்ரியாவாகவும், "செல்லமே' தொடரில் அஞ்சலியாகவும் வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவரும் காவ்யா பி.பி.ஏ. பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யவிருக்கும் பொங்கல் கலைவிழா நிகழ்ச்சியில் காவ்யா பங்குபெறவிருக்கிறார். நிகழ்ச்சிக்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.நிகழ்ச்சி குறித்து மேலும் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
Subscribe to:
Posts (Atom)