சமய நல்லிணக்க இஃப்தார் விருந்து 2025
சமய நல்லிணக்க இஃப்தார் விருந்து 2025
பஹ்ரைன் சமூக நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயற்படும், முறையாக பஹ்ரைன் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பான பாரதி தமிழ் சங்கம், நேற்றைய தினம் மார்ச் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய சங்கம் உள்ளரங்கில் இந்திய சங்கத்துடன் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் இஃப்தார் விருந்தை நடத்தியது.
450 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பல்வேறு இந்திய சமூகத் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் இது மதநல்லிணக்கத்திற்கும், புனித ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
இந்திய சங்கத்தின் துணைத் தலைவர் திரு. ஜோசப் ஜாய் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. வல்லம் பஷீர் உரையாற்றினார்.
'டிஸ்கவர் இஸ்லாம்' அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய திரு.அன்வர்தீன் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நோன்பின் மகத்துவத்தையும், நன்மைகளையும் விரிவாக எடுத்துரைத்தார்.
பாரதி தமிழ் சங்கம் பொதுச் செயலாளர் நாகூர் அப்துல் கையூம் கடந்த இரண்டுமாத சங்க செயற்பாடுகளை விளக்கி, இந்நிகழ்வை நடத்த உதவிய அத்தனை நல்லுள்ளங்களையும் நினைவுபடுத்தி நன்றியுரை நிகழ்த்தினார்.
நோன்பு துறப்பு விருந்தில் தமிழ்நாட்டில் இஃப்தாரின் போது பரிமாறப்படும் பாரம்பரிய உணவான 'நோன்பு கஞ்சி' இடம்பெற்றிருந்தது
Comments