Saturday, December 3, 2011

BKS அறிக்கைக்கு கண்டனம்




கடந்த சிலகாலமாக முல்லை பெரியார் அணை தொடர்பாக இந்தியா முழுவதும் சர்ச்சைகள் எழுந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இப்பிரச்சனை தொடர்பாக கடந்த 1.12.2011 பஹ்ரைனிலிருந்து வெளியாகும் Daily Tribune நாளிதழில், பஹ்ரைன் கேரளீய சமாஜத்தின் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் பிள்ளை அவர்கள் கேரள அரசுக்கு ஆதரவாக பஹ்ரைனில் கையெழுத்து இயக்கம் தொடங்கப் போவதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கை பஹ்ரைனில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு, இங்கு சகோதரத்துவத்தோடு சுமூகமாக வாழ்ந்து வருகின்ற இந்தியர்களின் ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிப்பதாக இருந்தது.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும், கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையினுடைய உண்மை நிலை குறித்தும் தெளிவான அறிக்கையொன்றை பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.முஹம்மது ஹுசைன் மாலிம் அவர்கள் அதே நாளிதழில் இன்று வெளியிட்ட அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

3 comments:

Santhappanசாந்தப்பன் said...

சரியான பதிலடி.

மிக்க நன்றி.!

பாரதி தமிழ்ச் சங்கம் said...

நன்றி

ABCD said...

முறையான நடவடிக்கை!