Thursday, April 10, 2025

திரைப்படப் பின்னணி பாடகர் ஶ்ரீகாந்த் ஹரிஹரன்







பஹ்ரைன் வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி. உங்களுக்காக ஒரு இசைமழை காத்திருக்கிறது. தயாராகுங்கள்.

ஶ்ரீகாந்த் ஹரிஹரன்
==================
திரைப்பட பின்னணி பாடகரான இவர் இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். கர்னாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றவர். கர்னாடக இசையை இவர் தன் தாயார் டாக்டர் பி.அருந்ததியிடமிருந்து முறையாக கற்றுத் தேர்ந்தவர்.
இவர் கேரளத்தில் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இவர், வயலின் வாத்தியக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் சக்கை போடு போட்டு வருகிறார்.
A.R.ரஹ்மான், D.இமான், யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர். ஆஸ்கார் நாயகனின் செல்லப்பிள்ளை என்று கூட சொல்லலாம். இவரது திறமையை கண்டெடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
உனக்காக (பிகில்), சோஃபியா (99 songs) , ஆழி சூழ்ந்த (சிவப்பு மஞ்சள் பச்சை) உதிரா உதிரா (பொன் மாணிக்கவேல்) , சிவோஹம் (பொன்னியின் செல்வன்) ஆகிய இவரது பாடல்கள் இவருக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தன.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், ராயன், பத்து தல போன்ற பல படங்களுக்கு இவர் இசை மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.
உலகம் முழுதும் பயணித்து பிரபல இசைக் கலைஞர்களுடன் மேடை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.
அட்டகாச குரலுடன் அனாயசமாக பாடும் இவரது குரல்வளம் சமுக வலைத்தளத்தில் இப்போது எல்லோரையும் கவர்ந்து வருகிறது.
முதன்முறையாக பஹ்ரைன் வருகை தரும் வளர்ந்து வரும் இளம் பாடகரான இவரது இசைத்திறமையை எதிர்வரும் மே1, பாரதிதமிழ் சங்கம் பிரமாண்டமான உள்ளரங்கில் ஏற்பாடு செய்யும் உலகத் தொழிலாளர்கள் தின கொண்டாட்டத்தின்போது கேட்டு இரசிக்கலாம்.
தரமான நிகழ்ச்சிகளை பஹ்ரைன் வாழ் தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் பாரதி தமிழ் சங்கம் இம்முறையும் ஒரு பிரமாண்டமான இசை, நகைச்சுவை, நடனம் இம்மூன்றும் கலந்து பல்சுவை நிகழ்ச்சி தர தயாராக உள்ளது,
நாள் : 01.05.2025
இடம் ; பஹ்ரைன் கேரளா சமாஜம்
நேரம் ; மாலை 5.00 மணி
இதுவரை அறந்தாங்கி நிஷா, ‘கலக்கப்போவது யாரு’ புகழ் பழனி, திரைப்படப் பின்னணி பாடகர் ஶ்ரீகாந்த் ஹரிஹரன் வருகை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற திரைக்கலைஞர்களின் விவரம் நாளை வெளிவரும்.
அனுமதி இலவசம்
அனைவரும் வருக ! ஆதரவு தருக !!

No comments: