Thursday, April 10, 2025

உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம்

 


ஶ்ரீகாந்த் ஹரிஹரன்


திரைப்பட பின்னணி பாடகரான இவர் இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். கர்னாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றவர். 

கர்னாடக இசையை இவர் தன் தாயார் டாக்டர் பி.அருந்ததியிடமிருந்து முறையாக கற்றுத் தேர்ந்தவர்.

இவர் கேரளத்தில் திருவனந்தபுரத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இவர், வயலின் வாத்தியக் கலைஞராகவும், பாடலாசிரியராகவும் சக்கைபோடு போட்டு வருகிறார்.

A.R.ரஹ்மான்,D.இமான், யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர். ஆஸ்கார் நாயகனின் செல்லப்பிள்ளை என்று கூட சொல்லலாம். இவரது திறமையை கண்டெடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

உனக்காக (பிகில்), சோஃபியா (99 songs) , ஆழி சூழ்ந்த (சிவப்பு மஞ்சள் பச்சை) உதிரா உதிரா (பொன் மாணிக்கவேல்) , சிவோஹம் (பொன்னியின் செல்வன்) ஆகிய இவரது பாடல்கள் இவருக்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தன.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், ராயன், பத்து தல போன்ற பல படங்களுக்கு இவர் இசை மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

உலகம் முழுதும் பயணித்து பிரபல இசைக் கலைஞர்களுடன் மேடை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். 

மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

அட்டகாச குரலுடன் அனாயசமாக பாடும் இவரது குரல்வளம் சமுக வலைத்தளத்தில் இப்போது எல்லோரையும் கவர்ந்து வருகிறது.

முதன்முறையாக பஹ்ரைன் வருகை தரும் வளர்ந்து வரும் இளம் பாடகரான இவரது இசைத்திறமையை எதிர்வரும் மே1, பாரதிதமிழ் சங்கம் பிரமாண்டமான உள்ளரங்கில் ஏற்பாடு செய்யும் உலகத் தொழிலாளர்கள் தின கொண்டாட்டத்தின்போது கேட்டு இரசிக்கலாம்.

தரமான நிகழ்ச்சிகளை பஹ்ரைன் வாழ் தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் பாரதி தமிழ் சங்கம் இம்முறையும் ஒரு பிரமாண்டமான இசை, நகைச்சுவை, நடனம் இம்மூன்றும் கலந்து பல்சுவை நிகழ்ச்சி தர தயாராக உள்ளது,

நாள் : 01.05.2025

இடம் ; பஹ்ரைன் கேரளா சமாஜம்

நேரம் ; மாலை 5.00 மணி

அனுமதி இலவசம்

 அனைவரும் வருக ! ஆதரவு தருக !!

 “Music has healing power. It has the ability to take people out of themselves for a few hours.” — Elton John




திரைப்படப் பின்னணி பாடகி -  ‘சூப்பர் சிங்கர் புகழ்’ ஃபரீதா 

இசையரசி பி.சுசிலாவின் எதிரொலியாக இசையுலகில் வலம் வரும் திறமையான பாடகி இவர். பிசிரில்லாத தேனினும் இனிய உச்சஸ்தாயி குரல் இவரது காந்தக் குரல். 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்  இசைத்துறையில் டிப்ளமா பட்டம் பெற்றவர்.

குறிப்பாக பி.சுசிலா அம்மாவின் குரலில் பழைய பாடல்களை சுதி மாறாமல் இவர் பாடுகையில் நம் நினைவுகளை கடந்த காலத்திற்கு இழுத்துச் செல்லும். 

சூப்பர் சிங்கர் 5 நிகழ்ச்சிகளில் இவர் பாடிய அத்தனை பாடல்களும் முத்தான பாடல்கள். 

சிங்கப்பூர், பிரான்சு, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஶ்ரீலங்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மொரீஷ்யஸ், அமெரிக்கா, கானடா, ஜப்பான், லண்டன், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து இசைக்கச்சேரியில் பாடியவர்.

விஜய் டிவி, கலைஞர் டிவி, பொதிகை டிவி மூலமாக நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்து காட்சி தந்தவர்.

நெஞ்சம் மறப்பதில்லை, ரசிகன், துள்ளாத மனமும் துள்ளும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் session 5 ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கலக்கியவர். 

‘இசையரசி’, ‘இசை கலைமணி’, ‘புதுவை இசைக்குயில்’, ‘சங்கீத கலாரத்னா’   

இவர் கீழ்க்கண்ட திரைப்படத்தில் பாடல்கள் பாடியுள்ளார் ; 

 2005 -  கஜேந்திரன் இசையில் ‘பேயுடன் ஒரு பேட்டி’ என்ற படம் 

2018 - யுவன் சங்கர் ராஜா இசையில் ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படம்

2018 - சந்தோஷ் நாரயணன் இசையில்  பரியேறும் பெருமாள் படம்

2019 - முஜீப் ரஹ்மான் இசையில் வண்ணக்கிளி பாரதி என்ற படம் 

இசைஞானி இளையராஜா இசையில் ஒரு இயக்குனரின் கதை என்ற திரைப்படத்தில் ‘கான ரீங்காரம்  செய்யும்’ என்ற பாடல் இவருடைய இசை அனுபவத்திற்கு மற்றுமோர் மணிமகுடம்

இசையமைப்பாளர் உமர் எழிலன் இசையில் ‘ஃபில்டர் கோல்டு’ என்ற திரைப்படத்தில் ‘பயமிருந்தா பூமி” என்ற பாடலமிவருக்கு சிறப்பை சேர்த்தது

வெளிவரவிருக்கும் ‘ஹபீபி’  திரைப்படத்தில் நடித்தும் “மக்கா முஹம்மது மேல்” இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் பாடியுள்ளார். 

உங்களுக்காக ஒரு இசைமழை காத்திருக்கிறது. தயாராகுங்கள். 

  • “Without music, life would be a mistake.” —Friedrich Nietzsche



அறந்தாங்கி நிஷா 

பாரதி தமிழ் சங்கம் நடத்தவுள்ள பிரமாண்டமான உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் அறந்தாங்கி நிஷா ரசிகர்களின் நெஞ்சத்தைக் கிள்ளப் போகிறார். நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. மூன்று மணி நேரம் மனதை இலகுவாக்கலாம். 

வண்ணத்திரை நகைச்சுவை நடிகையாக , சின்னத் திரை தாரகையாக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, மேடைப் பேச்சாளாராக ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. .  

‘சின்னத்திரை நயன்தாரா’ என்றும் ‘கருப்பு ரோஜா’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்

மாரி 2 , ஆண் தேவதை, திருச்சிற்றம்பலம்  போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பை சிறப்புற வெளிக்காட்டியவர்

800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். 

கலக்க போவது யாரு (2015), சகலை vs ரகளை (2018), கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் (2018), ராமர் வீடு (2019), திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) (2019),  குக் வித் கோமாளி (2019-2020), பிக் பாஸ் (சீசன் 4) (2020), பிக் பாஸ் ஜோடிகள் (சீசன் 1) (2021), நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி (2021), ஸ்டார் கிட்ஸ் (2021), பாரதி கண்ணம்மா (2021), திரு மற்றும் திருமதி சின்னத்திரை (சீசன் 4) (2022) மற்றும் விஜய் சபை (2022) போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக நிஷா பங்கெடுத்துள்ளார்.

ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் நடைபெறும் வளாகம்: 

பஹ்ரைன் கேரளா சமாஜம் உள்ளரங்கம் , SEGAIYA 

நாள் : மே 1 வியாழக்கிழமை 

நேரம் ; மாலை 5 மணி




‘கலக்கப்போவது யாரு’ புகழ் பழனி 

‘‘POWERFUL PERFORMER பழனி”  என்று அழைக்கப்படும் இவர் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். பட்டிமன்ற பேச்சாளர். பட்டிமன்ற நடுவர். இவருடைய நகைச்சுவைப் பேச்சை இன்று முழுவதும் இரசித்துக் கொண்டே இருக்கலாம். இவருடைய உடல் மொழியும், 'ரைமிங்' அடுக்கு மொழியும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். 

இலக்கியவாதியாக இருந்துக்கொண்டே தன் நகைச்சுவைப் பேச்சால் நற்கருத்தை மக்களின் மனதில் விதைப்பவர். லட்சக்கணக்கில் ரசிகர்களை தன்வசம் சம்பாதித்து  வைத்திருப்பவர். 

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கடலோரத்தில்தான். சொந்த ஊர் வேதாரண்யம். நகைச்சுவை உணர்வு என்பது இவர் இரத்தத்திலேயே ஊறித் திளைத்துப்போன ஒன்று. மனிதர் நம்மை சிரிக்க வைத்தே சாகடித்து விடுவார். 

இவருடைய மனைவி சங்கீதா, இவரும் ஒரு தமிழ்ப் பேராசிரியை. 

இவருடைய மகள் இவரிடம் “வெளியிலே எல்லாம் நல்லா பேசுறே, வீட்லே ஏம்பா பேச மாட்டேங்குறே”  என்ற கேள்விக்கு இவர் சொன்ன எதார்த்தமான பதில்

‘வெளியே பேசுனாத்தாம்பா சோறு. வீட்லே பேசாம இருந்தால்தான் சோறு”

இவர் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர். அரங்கத்தையே அதிரவைக்கும் ஆற்றல் படைத்தவர். பைந்தமிழரறிந்த பாவலர்.  

இன்று இவர்  பரபரப்பான சினிமா நடிகரும் கூட. 

அறந்தாங்கி நிஷா மற்றும் பழனியின் கலக்கல் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஊகித்துக் கொள்ளலாம். இவர்கள் இருவரும் சேர்ந்து அபிநயித்த அத்தனை நிகழ்ச்சிகளும் 'சூப்பர் டூப்பர் ஹிட்' என்பதை ரசிகர்கள் நன்கு அறிந்ததே.

இப்பொழுது முதன்முறையாக இந்த பிரபலங்கள் பஹ்ரைன் வருகை தருகிறார்கள். 

பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்யும் உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் இவர்களது கலக்கல் காமெடியை கண்டு களித்து வயிறு வலிக்க சிரிக்கலாம்.

அன்றாட இயந்திர வாழ்க்கைக்கு இடையே இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் பஹ்ரைன் வாழ் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். 

இன்றே மே 1 தேதியை உங்கள் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் வருகை தாருங்கள்.

அனுமதி முற்றிலும் இலவசம்

தொழிலாளர் சகோதர்களுக்கு ஏராளமான பரிசுகள் காத்திருக்கின்றன. இந்த நற்செய்தியை பலருக்கும் பகிருங்கள். நம் சொந்தங்கள் பயனடையட்டும் 

ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க,  இம்முறை பெருமளவு கூட்டத்தை சமாளிக்கவும், கோடைகால தட்பவெட்ப நிலை கருதி வெளியரங்கத்திற்கு பதிலாக குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ள பிரமாண்டமான உள்ளரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தாராளமாக கலந்துக் கொள்ளலாம். 

உழைப்பாளர் சகோதரர்களுக்கு பரிசு மழை காத்திருக்கிறது.

அலைகடலெனத் திரண்டு வரவும்

அனுமதி :  முற்றிலும் இலவசம்

உழைப்பாளர் சகோதரர்களுடன் நாம் மே தினம் கொண்டாடுவோம். 

தமிழால் இணைவோம்!

தமிழராய் ஒன்றுபடுவோம்






 


 



No comments: