'கலக்கப்போவது யாரு’ புகழ் பழனி
‘‘POWERFUL PERFORMER பழனி” என்று அழைக்கப்படும் இவர் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். பட்டிமன்ற பேச்சாளர். பட்டிமன்ற நடுவர். இவருடைய நகைச்சுவைப் பேச்சை இன்று முழுவதும் இரசித்துக் கொண்டே இருக்கலாம்.
இவருடைய உடல் மொழியும், 'ரைமிங்' அடுக்கு மொழியும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தும்.
இலக்கியவாதியாக இருந்துக்கொண்டே தன் நகைச்சுவைப் பேச்சால் நற்கருத்தை மக்களின் மனதில் விதைப்பவர். லட்சக்கணக்கில் ரசிகர்களை தன்வசம் சம்பாதித்து வைத்திருப்பவர்.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கடலோரத்தில்தான். சொந்த ஊர் வேதாரண்யம். நகைச்சுவை உணர்வு என்பது இவர் இரத்தத்திலேயே ஊறித் திளைத்துப்போன ஒன்று. மனிதர் நம்மை சிரிக்க வைத்தே சாகடித்து விடுவார்.
இவருடைய மனைவி சங்கீதா, இவரும் ஒரு தமிழ்ப் பேராசிரியை.
இவருடைய மகள் இவரிடம் “வெளியிலே எல்லாம் நல்லா பேசுறே, வீட்லே ஏம்பா பேச மாட்டேங்குறே” என்ற கேள்விக்கு இவர் சொன்ன எதார்த்தமான பதில்
‘வெளியே பேசுனாத்தாம்பா சோறு. வீட்லே பேசாம இருந்தால்தான் சோறு”
இவர் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர். அரங்கத்தையே அதிரவைக்கும் ஆற்றல் படைத்தவர். பைந்தமிழரறிந்த பாவலர்.
இன்று இவர் பரபரப்பான சினிமா நடிகரும் கூட.
அறந்தாங்கி நிஷா மற்றும் பழனியின் கலக்கல் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
இவர்கள் இருவரும் சேர்ந்து அபிநயித்த அத்தனை நிகழ்ச்சிகளும் 'சூப்பர் டூப்பர் ஹிட்' என்பதை ரசிகர்கள் நன்கு அறிந்ததே.
இப்பொழுது முதன்முறையாக இந்த பிரபலங்கள் பஹ்ரைன் வருகை தருகிறார்கள்.
பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்யும் உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் இவர்களது கலக்கல் காமெடியை கண்டு களித்து வயிறு வலிக்க சிரிக்கலாம்.
அன்றாட இயந்திர வாழ்க்கைக்கு இடையே இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் பஹ்ரைன் வாழ் தமிழ் சொந்தங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
இன்றே மே 1 தேதியை உங்கள் நாட்குறிப்பில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் வருகை தாருங்கள்.
அனுமதி முற்றிலும் இலவசம்
தொழிலாளர் சகோதர்களுக்கு ஏராளமான பரிசுகள் காத்திருக்கின்றன. இந்த நற்செய்தியை பலருக்கும் பகிருங்கள். நம் சொந்தங்கள் பயனடையட்டும்
No comments:
Post a Comment