அறந்தாங்கி நிஷா
==============
பாரதி தமிழ் சங்கம் நடத்தவுள்ள பிரமாண்டமான உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் அறந்தாங்கி நிஷா ரசிகர்களின் நெஞ்சத்தைக் கிள்ளப் போகிறார். நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. மூன்று மணி நேரம் மனதை இலகுவாக்கலாம்.
வண்ணத்திரை நகைச்சுவை நடிகையாக , சின்னத் திரை தாரகையாக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, மேடைப் பேச்சாளாராக ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் அறந்தாங்கி நிஷா. .
800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.
கலக்க போவது யாரு (2015), சகலை vs ரகளை (2018), கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் (2018), ராமர் வீடு (2019), திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) (2019), குக் வித் கோமாளி (2019-2020), பிக் பாஸ் (சீசன் 4) (2020), பிக் பாஸ் ஜோடிகள் (சீசன் 1) (2021), நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி (2021), ஸ்டார் கிட்ஸ் (2021), பாரதி கண்ணம்மா (2021), திரு மற்றும் திருமதி சின்னத்திரை (சீசன் 4) (2022) மற்றும் விஜய் சபை (2022) போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக நிஷா பங்கெடுத்துள்ளார்.
ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டம் நடைபெறும் வளாகம்:
பஹ்ரைன் கேரளா சமாஜம் உள்ளரங்கம் , SEGAIYA
நாள் : மே 1 வியாழக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இம்முறை பெருமளவு கூட்டத்தை சமாளிக்கவும், கோடைகால தட்பவெட்ப நிலை கருதி வெளியரங்கத்திற்கு பதிலாக குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ள பிரமாண்டமான உள்ளரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் தாராளமாக கலந்துக் கொள்ளலாம்.
உழைப்பாளர் சகோதரர்களுக்கு பரிசு மழை காத்திருக்கிறது.
அலைகடலெனத் திரண்டு வரவும்
அனுமதி : முற்றிலும் இலவசம்
உழைப்பாளர் சகோதரர்களுடன் நாம் மே தினம் கொண்டாடுவோம்.
தமிழால் இணைவோம்!
தமிழராய் ஒன்றுபடுவோம்
No comments:
Post a Comment