உலகத் தொழிலாளர் தினம்
மே 1, 2025
பாரதி தமிழ் சங்கம்
கொண்டாடும்
உலகத் தொழிலாளர் தினத்தன்று கலக்கப்போகும் திரையுலக பிரபலங்கள்
அனுமதி இலவசம்
இடம்: பஹ்ரைன் கேரளா சமாஜம்
மாலை : 5.00 மணி
பாரதி தமிழ் சங்கம் நடத்தவுள்ள பிரமாண்டமான உலகத் தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் அறந்தாங்கி நிஷா ரசிகர்களின் நெஞ்சத்தைக் கிள்ளப் போகிறார். மனதைக் கொள்ளை கொள்ளப் போகிறார்.
வண்ணத்திரை நகைச்சுவை நடிகையாக , சின்னத் திரை தாரகையாக நிகழ்ச்சி தொகுப்பாளராக, மேடைப் பேச்சாளாராக ரசிகர்களைக் கவர்ந்தவர்.
‘சின்னத்திரை நயந்தாரா’ என்றும் ‘கருப்பு ரோஜா’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்
மாரி 2 , ஆண் தேவதை, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியவர்
800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்.
கலக்க போவது யாரு (2015), சகலை vs ரகளை (2018), கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் (2018), ராமர் வீடு (2019), திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) (2019) குக் வித் கோமாளி (2019-2020), பிக் பாஸ் (சீசன் 4) (2020), பிக் பாஸ் ஜோடிகள் (சீசன் 1) (2021), நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி (2021), ஸ்டார் கிட்ஸ் (2021), பாரதி கண்ணம்மா (2021), திரு மற்றும் திருமதி சின்னத்திரை (சீசன் 4) (2022) மற்றும் விஜய் சபை (2022) போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக நிஷா பங்கெடுத்துள்ளார்.
ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
‘கலக்கப்போவது யாரு’ புகழ் பழனி
‘‘POWERFUL PERFORMER பழனி” என்று அழைக்கப்படும் இவர் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். பட்டிமன்ற பேச்சாளர். இவருடைய நகைச்சுவைப் பேச்சை இன்று முழுவதும் இரசித்துக் கொண்டே இருக்கலாம். இலக்கியவாதியாக இருந்துக்கொண்டே தன் நகைச்சுவைப் பேச்சால் நற்கருத்தை மக்களின் மனதில் விதைப்பவர்.
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கடலோரத்தில்தான். நகைச்சுவை உணர்வு என்பது இவர் இரத்தத்திலேயே ஊறித்திளைத்துப்போன ஒன்று. மனிதர் நம்மை சிரிக்க வைத்தே சாகடித்து விடுவார்.
இவருடைய மனைவி சங்கீதா, இவரும் ஒரு தமிழ்ப் பேராசிரியை. இன்று பரபரப்பான சினிமா நடிகர்.
இவருடைய மகள் இவரிடம் “வெளியிலே எல்லாம் நல்லா பேசுறே, வீட்லே ஏம்பா பேச மாட்டேங்குறே/” என்ற கேள்விக்கு இவர் சொன்ன பதில்
‘வெளியே பேசுனாத்தாம்பா சோறு. வீட்லே பேசாம இருந்தால்தான் சோறு”
இவர் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர்.அரங்கத்தையே அதிரவைக்கும் ஆற்றல் படைத்தவர். அறந்தாங்கி நிஷா மற்றும் பழனியின் கலக்கல் கூட்டணி எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஊகித்துக் கொள்ளலாம். பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்யும் உந்த் தொழிலாளர் தின கொண்டாட்டத்தில் இவர்களது கலக்கல் காமெடியை வயிறு வலிக்க கண்டு களிக்கலாம்
திரைப்படப் பின்னணி பாடகி - சூப்பர் சிங்கர் புகழ் பரீதா
இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமா பட்டம் பெற்றவர்.
சிங்கப்பூர், பிரான்சு, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஶ்ரீலங்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, மொரீஷ்யஸ், அமெரிக்கா, கானடா, ஜப்பான், லண்டன், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் பிரபல பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து இசைக்கச்சேரியில் பாடியவர்.
விஜய் டிவி, கலைஞர் டிவி, பொதிகை டிவி மூலமாக நம் வீட்டு வரவேற்பறைக்கே வந்து காட்சி தந்தவர்
நெஞ்சம் மறப்பதில்லை, ரசிகன், துள்ளாத மனமும் துள்ளும், ஏர்டெல் சூப்பர் சிங்கர் session 5 ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கலக்கியவர்.
‘இசையரசி’, ‘இசை கலைமணி’, ‘புதுவை இசைக்குயில்’, ‘சங்கீத கலாரத்னா’ போன்ற பட்டங்கள் பெற்றவர்
இவர் கீழ்க்கண்ட திரைப்படத்தில் பாடல்கள் பாடியுள்ளார் ;
2005 - கஜேந்திரன் இசையில் ‘பேயுடன் ஒரு பேட்டி’ என்ற படம்
2018 - யுவன் சங்கர் ராஜா இசையில் ‘ராஜா ரங்குஸ்கி’ என்ற படம்
2018 - சந்தோஷ் நாரயணன் இசையில் 'பரியேறும் பெருமாள்' என்ற படம்
2019 - முஜீப் ரஹ்மான் இசையில் 'வண்ணக்கிளி பாரதி' என்ற படம்

ஶ்ரீகாந்த் ஹரிஹரன்
இவர் இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். கர்னாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றவர். ஆஸ்கார் நாயகன் A.R.ரஹ்மான், D.இமான், யுவன் சங்கர் ராஜா போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியவர்
உனக்காக (பிகில்), சோஃபியா (99 songs) , ஆழி சூழ்ந்த (சிவப்பு மஞ்சள் பச்சை) உதிரா உதிரா (பொன் மாணிக்கவேல்) , சிவோஹம் (ஒன்னியின் செல்வன்) போன்ற இவரது பாடல்கள் இவருக்கு திரையுலகில் பெரும் வரவேற்பப் பெற்றுத் தந்தன.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2, மாமன்னன், ராயன், பத்து தல போன்ற பல படங்களுக்கு இவர்
பல படங்களுக்கு இவர் இசை மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.
உலகம் முழுதும் பயணித்து பிரபல இசைக்கலைஞர்களுடன் மேடை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
வளர்ந்து வரும் திறமையான பாடகர். வசீகர குரல்வளம் கொண்டவர்.
Comments