பொங்கல் விழா - 2015

பஹ்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பதிவு பெற்று, பஹ்ரைன் வாழ் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு மையமாகத் திகழும் பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழாவை ஜனவரி 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமான முறையில் கொண்டாட முடிவெடுத்துள்ளது . பஹ்ரைன் இந்திய சங்கத்தின் (Indian Club) நூறாவது ஆண்டையொட்டி இவ்விழா நடைபெறுவதால் மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.. பஹ்ரைன் தமிழ் சங்க செயல் வீரர்கள் இதற்கான மும்முரமான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். பஹ்ரைனில் செயல்படும் நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து இதற்கான செலவுகளுக்கு பொருளதவி செய்ய முன்வந்துள்ளன. உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களால் பொங்கல் பண்டிகை வளைகுடா, கீழைநாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. கடந்த பதினைந்து ஆண்டுகட்கும் மேலாக பொங்கல் விழா இதே இந்திய சங்கத்தின் திறந்தவெளி அரங்கத்தில் பஹ்ரைன் தமிழ் சங்கம் தவறாமல் கொண்டாடி வருகிறது. காலை முதல் இரவு வரை கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும் இப்பொங்கல் விழாவில் பஹ்ரை...