பஹ்ரைன் பாரதி தமிழ் சங்கம் ஏற்பாடு செய்யும் "பொங்கல் விழா" நிகழ்ச்சிக்கான "விளம்பரதாரர் ஒப்புதல் படிவம் வெளியீட்டு விழா" கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. முதல் ஒப்புதல் படிவத்தை இந்தியன் கிளப் தலைவர் ஆனந்த் லோபோ வெளியிட கன்ட்ரி கிளப் நிர்வாகி ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார்.
பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் அப்துல் கையூம், செயலாளர் முகம்மது சலீம், கேளிக்கை செயலாளர் G.P. சாமி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் லக்ஷ்மி நரசிம்மன், பொருளாளர் அப்துல் கபூர், முன்னாள் செயலாளர் கபீர் அஹ்மது, இந்தியன் கிளப் தலைவர் ஆனந்த் லோபோ ஆகியோர் மேடையில் வீற்றிருந்தனர். நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினர்கள் பலர் அழைக்கப்பட்டிருந்தனர். "விஷ்வ கலா சமிதி"யின் வளைகுடா மண்டலத் தலைவர் விஜயன், சுரேஷ் வைத்யனாதன், இந்தியாவிலிருந்து வருகை புரிந்திருக்கும் சைமன் லோபோ போன்றோர் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
வரும் ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை 9-ஆம் தேதி விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான முழு விவரங்கள் விரைவில் வெளியாகும்
No comments:
Post a Comment