Thursday, September 29, 2011

தமிழர் திருவிழா - ஜெமினிக்கு அஞ்சலி



காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு, அவர் நடித்த படங்களின் சுவையான காட்சிகள், நிஜ வாழ்க்கைச் சம்பவங்கள், வாழ்நாள் சாதனை முதலியவை ஆவணப்படமாக பெரிய திரையில் திரையிடப்பட உள்ளது


இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்
நாள் : சனிக்கிழமை 9.10.2011
நேரம் : மாலை 8.00 மணி



ஜெமினி கணேசனின் வாழ்க்கைக் குறிப்பு


தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா சரித்திரம் மிஸ்மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார்.

அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர். இந்நிலையில் அவருடைய தபால்தலை வெளிவந்திருப்பதும் அவர்தம் கலைத் திறனுக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.

அவரைப் பற்றிய சில சுவையான செய்திகள்


சிலஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. பராசக்தி (திரைப்படம்) மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.

ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.

ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.

தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்". இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்திரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய "இதயமலர்" திரைப்படத்தில் "லவ் ஆல்" என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.

ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான ஹம்லோக் சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.

இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா தாம் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.

ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகவில்லை அல்லது புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நினைவெல்லாம் நித்யா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.

ஜெமினி கணேசனின் மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.

Tuesday, September 27, 2011

தமிழர் திருவிழா - துவக்கவிழா



பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் திருவிழா துவக்கவிழா நிகழ்ச்சியில் இலக்கியச் சித்தர் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் கலந்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக உள்ளாட்சி மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அவரது பஹ்ரைன் வருகை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்தேதி சங்க நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும்.

துவக்கவிழா பட்டிமன்ற நடுவராக கவிஞர் நந்தலாலா பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார்.

நாள் : 7.10.2011
இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்
நேரம் : மாலை 6.30 மணி

Sunday, September 25, 2011

பட்டிமன்றம்



பாரதி தமிழ்ச்சங்கம்
பெருமையுடன் வழங்கும்
தமிழர் திருவிழா

நாள் : 07.10.2011
இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்

பட்டிமன்றம்
தலைப்பு:
கணவன்மார்கள் சந்தோஷமாக இருப்பது விட்டிலா? வெளியிலா?
பட்டிமன்ற நடுவர் : கவிஞர் நந்தலாலா

கவிஞர் நந்தலாலாவைப் பற்றி சில வரிகள் :

கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர் என இலக்கிய தளத்திலும், சமூக தளத்திலும் தனது தடங்களை ஆழப்பதித்து வருபவர் கவிஞர் நந்தலாலா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை, இலக்கிய இரவுக்காக தமிழகம்தோறும் சென்று, தனது இனிய உரைவீச்சால் இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சங்களை வசீகரித்து வருபவர். இளங் கவிஞர்களை இனங்கண்டு அவர்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்துவதையும், அவர்களின் கவிதைகளை மேற்கோள் களாகத் தனது உரையில் குறிப்பிட்டு அவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதையும் ஒரு குறிக்கோளாகக் கொண்டுள்ளவர். நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டும் என்ற முனைப்போடு இலக்கியப்பணி ஆற்றி இரவுவலம் வருகிற கவிஞர்.

அவரெழுதிய கவிதையொன்றில் பெண்ணினத்தின் மீதுள்ள நியாயமான கோபத்தின் வெளிப்பாடு நாம் காண முடிகிறது.

"ஓ பெண்ணே!
நீ அரைத்து வைக்கும் மாவுகூட
அடுத்தநாள் பொங்கிவிடுகிறது
இத்தனை தலைமுறை கடந்தும்
நீ பொங்காதிருத்தல் என்ன நியாயம்?'


கலந்துக் கொள்பவர்கள் :

வெளியிலே .....

வித்யா சத்யன் ('அரட்டை அரங்கம்' புகழ்)
முகம்மது சலீம் ('பூதம் புதிது' நாடகப் புகழ்)
திருச்சி சரவணன் ('பூதம் புதிது' நாடகப் புகழ்)

வீட்டிலே ....

உம்முல் ஹஸனா (இலக்கிய ஆர்வலர்)
பிரேமலதா ('அரட்டை அரங்கம்' புகழ்)
கவிஞர் அப்துல் கையூம்


அனைவரும் வருக! ஆதரவு தருக!

Wednesday, September 21, 2011

கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி



பாரதி தமிழ்ச் சங்கம்
பெருமையுடன் வழங்கும்
கர்நாடக சங்கீத இசைக்கச்சேரி
நாள் : 8 அக்டோபர் 2011
இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்
நேரம் : மலை 7.00 மணி

வாய்ப்பாட்டு : திருமதி சங்கீதா ராம்பிரசாத்
மிருதங்கம்: திரு. கிருஷ்ணகுமார்
வயலின் : திருமதி அர்ச்சனா கிருஷ்ணகுமார்
மோர்சிங் : திரு பால கிருஷ்ணன் T.S.


Tamil Classical Music Concert by Sangeetha Ram Prasadat Indian Club
Time : 7.00 p.m.

About Sangeetha Ram Prasad :

She has 20 years of association in the divine art of Classical Carnatic music. Born in a family with a traditional carnatic music background she started learning vocal music from her mother Mrs Revathi Srinivasan, a graded Veena artist working with All India Radio, Chennai. Also, she learnt from her grand mother Chellam Rajagopalan who is also a Veena artist. She took her training initially from Mrs Rajalakshmi, student of Sangeetha Kalanaidhi Sri D.K. Jayaraman. Later, she took intensive training from her Guru Sangeetha Kalanidhi Sri T.M. Thyagarajan for 6 years.

She gave her first Sabha concert at Nugambakkam Cultural academy, Chennai in 1992. She has given many performances at temples, sabhas and marriages in Tamil Nadu including reputed sabhas such as The Music Academy, Kalarasana, Tamil Esai Mandram, Bhaktha Jana Sabha , Tirupathi Devasthanam, Nadha Inbam - Raga Sudha Hall etc.,

Being a resident in Bahrain, she has given many concerts organized by various club in Bahrain.

The classical concert will have all the popular composition and a large number of music lovers are expected for the event, She is accompanied by the Mirudangam on the stage played by Mr: Krishna kumar and Violin by Mrs : Archana Krishnakumar, Moorsing : Mr. Bala Krishnan T.S., all renewned music artistes.
Programme Co-Ordinator : Mr.Lakshmi Narasimhan

Monday, September 19, 2011

தமிழர் திருவிழா




தமிழர் திருவிழா (ஒரு வார சிறப்பு நிகழ்ச்சிகள்)

துவக்க விழா நிகழ்ச்சி நிரல்

முக்கிய விருந்தினர் : இந்தியத் தூதுவர் மாண்புமிகு மோகன் குமார்
சிறப்பு விருந்தினர் : திரு.தாமோதரன் (நிர்வாக இயக்குனர் அனைத்துலக ஆயுள் காப்பீட்டுக் கழகம் - பஹ்ரைன்)

இடம் : இந்தியன் கிளப், பஹ்ரைன்
நாள் : 7.10.2011 வெள்ளிக் கிழமை
நேரம்: மாலை 6.30


பட்டி மன்றம்"கணவன்மார்கள் சந்தோஷமாக இருப்பது வீட்டிலா? வெளியிலா?"

பட்டிமன்ற நடுவர் : கவிஞர் நந்தலாலா

வீட்டிலே...
திருமதி. வித்யா சத்யன்
திருமதி. பிரேமலதா
திருமதி. உம்முல்ஹசனா கபீர்

வெளியிலே...
திரு.அப்துல் கையூம்
திரு.சரவணன்
திரு.முகம்மது சலீம்

இலக்கியப் பேருரை
தலைப்பு : "அந்த நாள் எந்த நாளோ?"

இலக்கியச் சித்தர் நாஞ்சில் சம்பத் M.A., M.Phil
இவர் தமிழக இலக்கிய அரங்கில் முக்கிய பேச்சாளராகவும் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக சிறந்த பேச்சாளராகவும் இருக்கிறார். அண்ணா பல்கலைக்கழகம் இவருக்கு "இலக்கியச் சித்தர்" என்ற பட்டத்தையும், சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் இவருக்கு 'நர்த்தன சொல் நாயகன்' என்ற பட்டத்தையும் அளித்து கெளரவித்தது. இவர் எழுதிய நூல்களில் 'இலக்கிய பூங்கா', 'பதிலுக்கு பதில்', 'பேசப் பெரிதும் இனியவன்', 'என்னைத் தொட்ட என்.எஸ்.கே.', 'நான் பேச நினைப்பதெல்லாம்' இவைகள் முக்கியமானவை. இவர் 1989-ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முன்னிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை மணிநேரம் மேடையில் உரையாற்றி சாதனை படத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : திரு. செந்தமிழ்ச் செல்வன்