ஜனவரி 26, 2025 குடியரசு தினத்தன்று இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற விழாவில் பாரதி தமிழ் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு இந்தியத் தூதுவர் மாண்புமிகு வினோத் கே. ஜேக்கப் அவர்களுடன் எடுத்துக்கொண்ட ஒளிப்படம்
அன்புடையீர், பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், சட்ட திட்டங்களை அறியாததாலும், போதிய படிப்பறிவு இல்லாதாலும், சிற்சமயம் ஏஜண்ட் அல்லது முதலாளிமார்களிடத்தில் வெள்ளைத்தாளில் கையெழுத்திட்டுக் கொடுத்து இன்னல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். இங்குள்ள சட்ட திட்டங்கள் என்ன?, பிரச்சினைகள் வரும்போது அதனை எதிர்க்கொள்வது எப்படி?, பணியாளர்களின் கடமை என்ன? அவர்களது உரிமைகள் என்னென்ன? என்ற விவரங்களை தொகுத்து அளித்திருக்கிறேன். ஏஜண்ட்களிடம் பணத்தையும் இழந்து, பலவிதத்திலும் அவதியுறும் தொழிலாளர் அன்பர்களை நான் அவ்வப்போது சந்தித்து வருகிறேன். அவர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களை சரியான முறையில் வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் பஹ்ரரைன் நாட்டு தொழிலாளர் நல சட்டங்களை இதோ தமிழில் மொழி பெயர்த்து தந்திருக்கிறேன். இதற்காக எனது ஓய்வு நேரத்தில் பலமணி நேரங்கள் செலவழித்து மொழியாக்கம் செய்திருக்கிறேன். இந்த சட்டங்களை ஒவ்வொரு தொழிலாளர் அன்பர்களும் அறிந்து வைத்திருப்பது அவசியம். அன்புடன் அப்துல் கையூம் தலைவர், பாரதி தமிழ் சங்கம் பஹ்ரைன் தொழிலாளர் ஒழுங்குமுறை ஆணையம் (LMRA) ஆக்க...
சமய நல்லிணக்க இஃப்தார் விருந்து 2025 பஹ்ரைன் சமூக நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் செயற்படும், முறையாக பஹ்ரைன் அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்பான பாரதி தமிழ் சங்கம், நேற்றைய தினம் மார்ச் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய சங்கம் உள்ளரங்கில் இந்திய சங்கத்துடன் ஒருங்கிணைந்து ஒரு மாபெரும் இஃப்தார் விருந்தை நடத்தியது. 450 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் பல்வேறு இந்திய சமூகத் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் இது மதநல்லிணக்கத்திற்கும், புனித ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது. இந்திய சங்கத்தின் துணைத் தலைவர் திரு. ஜோசப் ஜாய் வரவேற்புரை நிகழ்த்தினார். பாரதி தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. வல்லம் பஷீர் உரையாற்றினார். 'டிஸ்கவர் இஸ்லாம்' அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய திரு.அன்வர்தீன் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நோன்பின் மகத்துவத்தையும், நன்மைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். பாரதி ...
Comments