பஹ்ரைனில் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய உழைப்பாளர் தின விழா
பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய “உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்” மே மாதம் வெள்ளிக்கிழமை 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோலாகலமான விழாவாக பஹ்ரைனில் நடந்தேறியது. இந்தியச் சங்க திறந்த வெளியரங்கில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர் சகோதரர்கள் பெருந்திரளாக வந்து கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். பஹ்ரைன் நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும், இந்தியத் தூதரக அதிகாரிகளும், ஏனைய இந்திய சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்ட இவ்விழாவில், நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே தொழிலாளர் சகோதரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டது. பஹ்ரைன் நாட்டு உள்ளாட்சித் துறை நகர்ப்புற திட்ட இயக்குனர் மாண்புமிகு ஷேக் ஹாமத் முஹம்மது அல் கலீஃபா அவர்கள் கெளரவ விருந்தினராகவும், பஹ்ரைன் நாட்டுக்கான இந்தியத் தூதர் மாண்புமிகு முனைவர் மோகன்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்த வைபவம் சிறப்பாக பேசப்பட்டது. தங்களது உடலுழைப்பால் இந்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக ந...