Posts

Showing posts from April, 2014

புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (2014-16)

Image
பஹ்ரைன் அரசின் முறையான அங்கீகாரம் பெற்று அதன் சமூக விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாரதி தமிழ் சங்கம், புதிய நிர்வாகக் குழுவுக்கான (2014-16)  தேர்தலை நடத்தியது. கீழ்க்கண்ட உறுப்பினர்கள் புதிய செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். உட்கார்ந்திருப்பவர்கள் : [இடமிருந்து வலம்] ஜாபர் சாதிக் (கேளிக்கை துணை செயலாளர்),  அப்துல் கபூர் (பொருளாளர்), திருச்சி சரவணன் (துணைத் தலைவர்), அப்துல் கையூம் (தலைவர்), முகம்மது சலீம் (பொதுச் செயலாளர்), தாயகம் சுரேஷ் (துணைப் பொதுச் செயலாளர், நிற்பவர்கள்: [இடமிருந்து வலம்] ஹாஜா மெய்தீன் ( தொண்டர் அணித்தலைவர்), ஸ்ரீதர் சிவா (உள்ளரங்க விளையாட்டுச் செயலாளர் ), கோவிந்தன் பெரியசாமி (கேளிக்கைச் செயலாளர்), முருகன் முத்துவேல் ( சமூகச் சேவை செயலாளர்), வல்லம் பஷீர் ( இலக்கியச் செயலாளர்), ஷேக் மன்சூர் (துணைப் பொருளாளர்), சுப்ரமணியன் தேவராஜன் (விளையாட்டுச் செயலாளர்)
Image

உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் 2014

Image
எதிர்வரும் மே மாதம் 2- ஆம் தேதி “ உழைப்பாளர் தின ” த்தை முன்னிட்டு கோலாகலமா ன விழாவாக கொண்டாட முடிவெடுத்து பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஆண்டுதோறும் பாரதி தமிழ்ச் சங்கம் “ உழைப்பாளர் தின ” த்தை பிரமாண்டமாக கொண்டாடி வருவது எல்லோரும் அறிந்ததே. பஹ்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் உழைப்பாளர் களை ஒன்றுகூட வைத்து , அவர்களை ஆடல் பாடல்கள் மூலம் மகிழ்வித்து , அவர்களுடைய ஈடு இணையற்ற கடும் உழைப்பிற்கு போதிய அங்கீகாரம் வழங்குவதை நம் சங்கம் வழக்கமாகச் செய்து வருகிறது.  இவ்வாண்டு வெள்ளிக்கிழமை 2-5-2014 அன்று மாலை 6.30 மணி அளவில் இந்திய சங்க வெளியரங்கத்தில் நடைபெறும் உழைப்பாளர் தினத்தை ஒட்டி ஏற்பாடுகள் முழு வீ ச் சில் ந டைபெற்று வருகிறது. இந்தியத் தூதர் முனைவர் மோகன் குமார் அவர்கள் பங்கு கொண்டு உரையாற்ற இசைந்திருக்கின்றார்கள். நிகழ்ச்சியின் இடையே பார்வையாளர்களுக்கு அதிரடி பரிசுகள் வழங்க   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த்திரையுலக வண்ணத்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் இசை மற்றும் நடன ...