Monday, April 14, 2014

உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் 2014

எதிர்வரும் மே மாதம் 2-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கோலாகலமா விழாவாக கொண்டாட முடிவெடுத்து பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் சிறப்பான முறையில் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஆண்டுதோறும் பாரதி தமிழ்ச் சங்கம் உழைப்பாளர் தினத்தை பிரமாண்டமாக கொண்டாடி வருவது எல்லோரும் அறிந்ததே. பஹ்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் உழைப்பாளர்களை ஒன்றுகூட வைத்து, அவர்களை ஆடல் பாடல்கள் மூலம் மகிழ்வித்து, அவர்களுடைய ஈடு இணையற்ற கடும் உழைப்பிற்கு போதிய அங்கீகாரம் வழங்குவதை நம் சங்கம் வழக்கமாகச் செய்து வருகிறது. 

இவ்வாண்டு வெள்ளிக்கிழமை 2-5-2014 அன்று மாலை 6.30 மணி அளவில் இந்திய சங்க வெளியரங்கத்தில் நடைபெறும் உழைப்பாளர் தினத்தை ஒட்டி ஏற்பாடுகள் முழுவீச்சில்டைபெற்று வருகிறது.

இந்தியத் தூதர் முனைவர் மோகன் குமார் அவர்கள் பங்கு கொண்டு உரையாற்ற இசைந்திருக்கின்றார்கள். நிகழ்ச்சியின் இடையே பார்வையாளர்களுக்கு அதிரடி பரிசுகள் வழங்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த்திரையுலக வண்ணத்திரை மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பங்கு கொள்ளும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொள்ளும் என்பது திண்ணம்.


வளர்ந்துவரும் திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணி பாடகரும், பிரபல மேடை பாடகருமான துரைராஜன் தன் வசீகரக் குரலால் இசைவிருந்து படைக்க உள்ளார்.

துரைராஜன் "கலைஞர்" தொலைக்காட்சி நடத்தும் "இன்னிசை மழை" மற்றும் "ஜெயா" தொலைக்காட்சியில் நடைபெறும் "மனதோடு மனம்" நிகழ்ச்சி  மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். மேலும் "சன்", "இமயம்" மற்றும் "ராஜ்" தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிகழ்ச்சியில் இடம்பெற்று தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம். எஸ்.ஜானகி, பி.சுசிலா, P.B.ஸ்ரீனிவாஸ் உட்பட பிரபல பின்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து மேடைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி "சொதப்பல் மன்னன்" என்ற படத்தையும் இயக்க உள்ளார்.

இவர் பாரதி தமிழ்ச்சங்கத்தின் அழைப்பின் பேரில் பஹ்ரைன் வருவது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த நிகழ்ச்சிகளின்போது அமோக வரவற்பைப் பெற்ற இவர், ரசிகர்களின் மிகுந்த வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ழைக்கப்படுள்ளார்.

இவரோடு இணைந்து ஷில்பா, ஷிவானி, மகேஷ் மற்றும் திவ்யாஸ்ரீ உள்ளிட்ட கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறார்கள்.

நடிகை ஷில்பா


ஊடகத்துறைக்கு தொகுப்பாளினியாக அறிமுகமாகிய நடிகை ஷில்பா பன்முகக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியமானவளே”, “புதுமை பித்தன்”, “காமராசுபோன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டியவர். ராடன் நிறுவனத்தினரின் அரசி”, “செல்லமே”, “சாந்தி நிலையம்”, “அமுதா ஒரு ஆச்சரியக்குறி”  போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

ஏ.வி.எம். நிறுவனத்தின் கீதாஞ்சலி”, விஜய் தொலைக்காட்சியின் அக்னிசாட்சி”, இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் மைக்ரோ மேக்ரோபோன்ற தொடர்கள் இவருடைய கலைப்பயணத்திற்கு படிக்கட்டுகளாக அமைந்தன. விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் 1, ஜோடி சீஸன் 6, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இவருடைய திறமை பரவலாக பேசப்பட்டது

நடிகை ஷிவானி


நிகழ்ச்சியில் பங்கு பெறும் மற்றுமொரு திறமையுள்ள கலைஞர் நடிகை ஷிவானி. திருமதி செல்வம்”, “இதயம்போன்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர். அமுல் சூப்பர் குடும்பம்” (சீசன் 1 & 2), ஜோடி நம்பர் (சீசன் 6 & 7) ஆகிய நிகழ்ச்சிகள் இவருடைய அபாரத் திறமைக்கு சான்றாக அமைந்தன,

நடிகை திவ்யாஸ்ரீ


இவர் இனிமையான குரல்வளம் படைத்தவர். லக்ஷ்மண் சுருதி”, “சாதகப் பறவைகள்”, “கிரேஸ் கருணாஸ் மாஸ்ட்ரோபோன்ற தமிழகத்தின் பிரபல இசைக்குழுக்களில் பாடி எண்ணற்ற இசைப்பிரியர்களின் இதயத்தைக் கொள்ளைக் கொண்டவர்.

இசையமைப்பாளர்கள் தேவா, கங்கை அமரன், சங்கர் கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, தமன், தரண், தேவன், ஜான் பீட்டர், ஸ்டீபன், ஜகன் கல்யாண் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர். 17 வருடங்களாக மேடைக் கச்சேரிகளில் இசைக்குயிலாய் பவனி வரும் இவருக்கு ஊக்கமளித்து இவரது இசைப்பயணத்தில் உறுதுணையாக இருந்தவர் இவரது தந்தை D.நாகேஷ் அவர்கள். இவர் இசைத்துறையில் ஏறக்குறைய 30 வருடங்கள் பணியாற்றியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மகேஷ்


ஜீ தமிழ்: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திரை அரங்கம்”  நிகழ்ச்சியை தொகுத்தளித்த இவரை ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது. மானாட மயிலாட” (சீசன் 4) நிகழ்ச்சியில் இவரது அபார நடனத் திறமை வெளியுலகத்திற்கு தெரிய வந்தது. விரைவில் வெளிவரவிருக்கும் காசு பணம் துட்டுமற்றும் விழி மூடி யோசித்தல்”  போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொந்த பந்தம்தொடரில் தொடர் நடித்து வருகிறார்.

பாரதி தமிழ்ச் சங்கத்தின் இந்த மாபெரும் உழைப்பாளர் தின கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள அண்டை நாடுகளான சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாடுகளிலிருந்தும் தமிழ் அன்பர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியில் மனதை வருடும் காலத்தால் அழியாத பழைய பாடல்களும், நெஞ்சை அள்ளும் புதிய பாடல்களும் இசைக்கப்படும். பஹ்ரைன் நாட்டின் பிரபல மியுசிக் சிட்டிமெல்லிசைக் குழுவினர் இசைமழை பொழிவார்கள்.

நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரளாக வந்து கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு தொடங்கும். முன்வாயில் 6.00 மணிக்கு திறக்கப்படும். முன்வருபவர்களுக்கு முன்னிருக்கை ஒதுக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள :

சங்க செயலாளர் : முகம்மது சலீம் 00973-39873488
சங்க கேளிக்கைச் செயலாளர் : G.P.சாமி 00973-39447151
சங்க துணைச் செயலாளர் : சுரேஷ் பாபு 00973-36040711

No comments: