Monday, May 24, 2010

தொழிலாளர் தின கொண்டாட்டம்








23, மே - மனாமா, பஹ்ரைன்.

பஹ்ரைன் நாட்டின் தமிழர்கள் நலன் காக்கும் அதிகாரப்பூர்வமான அமைப்பான பாரதி தமிழ்ச்சங்கம் மிகப்பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தினம், கடந்த வெள்ளிக்கிழமை 21-ஆம் தேதியன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஈஸா டவுன் இந்தியப் பள்ளி அரங்கம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

சொகுசுப் பேருந்தில் அழைத்து வரப்பட்ட 1500 -க்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். பன்னீர் தெளித்து, சந்தனம், கற்கண்டு, வழங்கி தமிழ்க் கலாச்சார முறையில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் கையாலேயே குத்துவிளக்கு ஏற்றப் பட்டு அவர்களுக்கு முதல் மரியாதை அளித்து நிகழ்ச்சி தொடங்கப்பட்ட விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்தியத் தூதுவர் மேதகு டாக்டர் ஜார்ஜ் ஜோஸப் அவர்கள் முக்கிய விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். பஹ்ரைன் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் முன்னாள் முதன்மைச் செயலர் மாண்புமிகு மஹ்மூது அல் மஹ்மூது கெளரவ விருந்தினராக கலந்துக் கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

ஏராளமான பரிசுப் பொருட்கள் தொழிலாலர்களுக்கு அள்ளி வழங்கப்பட்டன.

இசைக்குழுவோடு பாரதி தமிழ்ச் சங்கத்தின் திறம் வாய்ந்த கலைஞர்கள் மெல்லிசை நிகழ்ச்சி வழங்கினார்கள். பஹ்ரைன் நாட்டின் புகழ்பெற்ற நடனக்கலைஞர்கள் வடிவமைத்த திரைப்பட நடனம், கரகாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.

மேடையில் மே மாதம் பிறந்தவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அறுபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் கலந்துக் கொண்டனர். இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி அவர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்க முதல் இறுதிவரை களை கட்டியிருந்த விழா கொண்டாட்டத்தில், தொழிலாளர்கள் தங்கள் கவலைகளை மறந்து ஆடியும் பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது காண்போர் மனதைக் கவர்ந்தது.

விபத்தில் கால் இழந்த ராம் அவதார் ஷர்மா என்ற தொழிலாளருக்கு ரூ 3 லட்சத்திற்கான (2500 பஹ்ரைன் தீனார்) காப்புறுதித் தொகையை மேதகு இந்தியத் தூதுவர் டாக்டர் ஜார்ஜ் ஜோஸப் அவர்கள் விழா மேடையில் வழங்கினார். பஹ்ரைன் நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டில் நமது தொழிலாளர் சகோதரர்களின் பங்களிப்பு கணக்கிலடங்காது என்று எடுத்துரைத்தார்.

இந்தியத் தூதுவர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப் மற்றும் பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முகம்மது ஹுசைன் மாலிம் அவர்கள் உரையாற்றுகையில் கூட்டுக் காப்பிட்டுத் திட்டத்தின் அவசியத்தை தொழிலாளர்களுக்கு எடுத்துரைத்தனர். மிகக் குறைந்த மதிப்பில், ஆண்டு தவணைக் கட்டணம் அரை தீனார் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த திட்டத்தில் இணைய வேண்டி விண்ணப்பப் படிவத்தை தொழிலாளர்கள் பேரார்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

சுகாதார முறையில் சுவையாக தயாரிக்கப்பட்டிருந்த உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டன. இரவு 9.30 மணிக்கு விழா இனிதே முடிவுற பூரிப்போடு தொழிலாளர்கள் விடு திரும்பிய காட்சி உள்ள நிறைவைத் தந்தது.

Wednesday, February 17, 2010


Bharathi Association celebrated Pongal 2010 in a grand manner at the Indian Club on 15th January 2010
To View the photos please click HERE

Tuesday, February 9, 2010

திரு.சரத்குமார் தம்பதிகளுக்கு வரவேற்பு



A Grand Reception was given to Mr.Sarath Kumar & Mrs. Radhika Sarath Kumar was given by Bharathi Association during their private visit to Bahrain on 15th December 2009
To view All the photos Please Click Here

Sunday, May 17, 2009

பாராட்டு விழா



நடிகர் நீலு அவர்களின் பாராட்டு விழா புகைப்படங்கள் அனைத்தையும் காண கீழே சொடுக்கவும்:
VIEW PHOTO ALBUM

Tuesday, May 5, 2009

நடிகர் நீலுவுக்கு பாராட்டு விழா



நடிப்புத்துறையில் அருஞ்சாதனை புரிந்துவரும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நீலு அவர்களுக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

வரும் 15-05-2009 ஆம் தேதி, அல்-ரஜா பள்ளிக்கூட கலையரங்கில் “நீலுவின் நகைச்சுவை நேரம்” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலு அவர்கள் வழங்கும் நகைச்சுவை விருந்து/ கலந்துரையாடல்/ மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

நீலுவைப் பற்றி சில வார்த்தைகள் :

அறிமுகமே தேவையில்லாத அபூர்வ நடிகர் இவர்.

இவரது இயற்பெயர் R. நீலகண்டன். ஜூலை 26, 1936-ஆம் ஆண்டு பிறந்த நீலுவின் பூர்வீகம் கேரளாவிலுள்ள மஞ்சேரி எனும் ஊர். மற்றபடி படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். விவாகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் V.D.Swami & Co. என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பொது மேலாளராக 40 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

நாடகத்துறை :

நடிப்பு என்பது இவரது இரத்தத்தில் இரண்டறக் கலந்தது. நாடகத்துறையில் தனது ஏழாவது வயது முதற்கொண்டே நடிக்கத் தொடங்கியவர். நடிகர் ‘சோ’வின் விவேக் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் 50 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர். சுமார் 7,000 க்கும் மேலான மேடை நாடகங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் இவர் தோன்றி சாதனை புரிந்துள்ளார். கிரேஸி மோகனின் குழுவிலும் பங்கேற்று நடித்து வருகிறார்.

சினிமாத் துறை :

திரைப்படங்களில் 1966-ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடித்து வருபவர். வெள்ளித் திரையில் இவர் தோன்றிய முதற்படம் ‘ஆயிரம் பொய்’. இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்து இருப்பவர்.
அந்நியன், பம்மல் கே. சம்பந்தம், வீராப்பு, பெரியார் போன்ற அண்மையில் வெளியான படங்களிலும் நடித்து இருப்பவர். தமிழ்த்திரைப்பட உலகின் முன்னணி நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினி காந்த், கமல் ஹாஸன், அர்ஜூன், அஜீத், சரத் குமார், பிரபு, கார்த்திக், நாகேஷ், மாதவன் போன்றவர்களுடன் இணைந்து நடித்து இருப்பவர்.

தலைசிறந்த இயக்குனர்கள் பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, கே.பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், பாரதி ராஜா, சுந்தர் சி., சங்கர் முதலானோர்களின் இயக்கத்தில் நடித்து இருப்பவர்.

இவையன்றி ஒரு மலையாளம் மற்றும் தெலுங்கு படத்திலும் நடித்து இருக்கிறார்.

சின்னத்திரை :

இதுவரை 35-க்கு மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்திருக்கிறார். தற்சமயம் இவர் நடித்து வரும் “எங்கே பிராமணன்” ஜெயா டிவியில் தினமும் (திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் இரவு 8.00 – 8.30 மணிக்கு) ஒளிபரப்பாகிறது.

V.P.L. (வெட்டிப் பேச்சு லீக்) கலைஞர் டிவியில் தினமும் (திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரம் இரவு 10.00 – 10.30 மணிக்கு) ஒளிபரப்பாகிறது.
சாவி எழுதிய புகழ்பெற்ற “வாஷிங்டனில் திருமணம்” என்ற நகைச்சுவைத் தொடருக்காக இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார் நீலு. 90-களில் தூரதர்ஷன் தொலைக்காட்சி இத்தொடரை ஒளிபரப்பியபோது அதிக அளவில் TRP மதிப்பீடு பெற்றிருந்தது இத்தொடரின் வெற்றிக்கு அடையாளம்.

அதிகம் பேசப்பட்ட மற்றொரு தொலைக்காட்சித் தொடர் மாலியின் “ப்ளைட் 172” என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவர் வானொலி நாடகங்களில் தொடர்ந்து பங்கு பெற்று வருகிறார். கர்னாடக இசையில் பெரிதும் ஆர்வமுள்ளவர்.

இவருக்கு அர்ஜுன், பரத் என்ற பெயரில் இரண்டு மகன்கள் உள்ளனர். இல்லத்துணைவியார் திருமதி சாந்தா நீலகண்டன் சென்னையில் இயங்கும் பள்ளிக்கூடங்களில் புவியியல் ஆசிரியையாக 20 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, சூடான், குவைத், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் முதலிய நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

மே 15, 2009 அன்று நடைபெறப்போகும் பாராட்டுவிழாவில் அவருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம்: அல்-ரஜா பள்ளிக்கூடம், மனாமா.
நேரம் : மாலை : 6.30 மணி.
அனுமதி இலவசம்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள அப்துல் கையூம் 00973-39628773/ கபீர் அஹமது 00973-39404100.
இந்நிகழ்ச்சியைப் பற்றிய விள்ம்பரங்கள் வெளிவந்த ஏடுகள்/ பதிவுகள்
Gulf Daily News (First Issue)
Gulf Daily News (Second Issue)