தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் தின நிகழ்வில் பங்கேற்க சென்னை சென்ற சங்க பொதுச் செயலாளர் கவிஞர் நாகூர் அப்துல் கையூம் , கலை பாண்பாட்டு கேளிக்கை செயலாளர் திருமதி.ஹன்சுல் கனி, உறுப்பினர் சேர்க்கைச் செயலாளர் சபீக் மீரான், மேனாள் கேளிக்கைச் செயலாளர் கனி ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து அயலக தமிழர் தின விழாவை சிறப்பாக வடிவமைத்ததற்கு நன்றி பாராட்டியதோடு, பஹ்ரைன் வாழ் தமிழர்கள் சார்பாக தமிழர் திருநாள் வாழ்த்துளையும் தெரிவித்தனர்.
சுமார் 80,000-க்கும் மேலான தமிழர்கள் வசிக்கும் பஹ்ரைன் நாட்டில் தமிழ்ச் சொந்தங்களுக்காக பாடுபடும் பஹ்ரைன் அரசின் அங்கீகாரம் பெற்ற பாரதி தமிழ் சங்கத்திற்கென சொந்தமாக கட்டிடம் நிறுவ நிதியுதவி கோரிக்கையும் அளித்தனர்.
No comments:
Post a Comment