நேற்றைய தினம் (21.02.25) பஹ்ரைனிலுள்ள இந்தியத் தூதுவரகம் "Bahrain in India" என்ற கோலாகலத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பாரதி தமிழ்ச் சங்கம் இதில் கலந்துக் கொண்டு சிறப்பித்தது
தமிழ்ப் பாரம்பரிய உணவுகள் ஒரு ஸ்டாலிலும், தமிழ்நாட்டு கைத்தறி துணிகள், சங்க இலக்கியங்கள், உறுப்பினர்கள் வரைந்த தமிழகத்துச் சிறப்புகளை சித்தரிக்கும் ஓவியங்கள், தமிழ்ப்பறை, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கீழடி பற்றிய ஆய்வுகள் திரையில் ஓளிபரப்பு செய்யப்பட்டது.
பல்வேறு நாட்டார், பல்வேறு சமூகத்தார் வருகை புரிந்த இத்திருவிழாவில் தமிழ்நாட்டின் பெருமைகளை விளக்குவதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். தமிழகத்து நாட்டுப்பாடல்கள் ஒலிபெருக்கியில் ஒலித்த வண்ணமிருந்தன. .
திறந்த வெளியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்ட இம்மாபெரும் திருவிழாவில் பாரதி தமிழ் சங்கம் சார்பாக மாணவிகள் கலந்துக் கொண்ட வண்ணமயமான பரத நாட்டிய நிகழ்ச்சிகள் மேடையில் நடைபெற்றன. அகன்ற LED திரையில் அதற்கேற்ப தமிழகத்து காட்சிக் கோர்வைகள் ஒளிபரப்பானது.
திரு அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலான
'முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்"
என்ற பக்திப் பாடலுக்கு ஏராளமான மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆடிய நாட்டியம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
பிரமாதமான சந்தம் நிறைந்த இப்பாடலைக் கேட்டு ஆரவாரத்துடன் கரகோஷம் செய்து பிரமித்தோரில் ஆங்கிலேயரும், அராபியர்களும் , பிறநாட்டாரும் அடக்கம்.
இந்த நடனத்தை வடிவமைத்தவர் சங்கத்தின் ஆஸ்தான நடனகுரு திருமதி ஹன்சுல் கனி அவர்கள்.
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாரதி கண்ட கனவை நிறைவேற்றிய மனத்திருப்தி தமிழர்களாகிய நமக்கு ஏற்பட்டது. பார்வையாளர்களின் எகோபித்த பாராட்டுதலைப் பெற்றுத் தந்தது.
பாரதி தமிழ் சங்க அரங்குக்கு வருகை தந்த இந்தியத் தூதுவர் மாண்புமிகு வினோத் கே ஜேக்கப் அவர்களுக்கு பாரதி தமிழ் சங்கத்தின் சமூகச்சேவை செயலாளர் சல்மான் மாலிம் மற்றும் பாரதி தமிழ் சங்கத்தின் கலை இலக்கிய பண்பாட்டு கேளிக்கை செயலாளர் திருமதி ஹன்சுல் கனி பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர்.
பாரதி தமிழ் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலாளர் சபீக் மீரான் ஏற்பாட்டின்பேரில் திருவிழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் 1000-க்கும் மேலான பரிசுகள் விநியோகிக்கப்பட்டன.
அரங்குக்கு வந்த அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. இலவச மருத்துவ சோதனைக்கான கூப்பன்கள் எல்லோர்க்கும் விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்காக அரும்பாடுபட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுபாஷ் , சல்மான் , இஸ்மாயில் , ஸ்ரீதர் , மன்சூர் , அசோக் , இளையராஜா உள்ளிட்டோருக்கும் மூத்த உறுப்பினர்கள் முத்துவேல் , கனி , சுல்தான் இப்ராஹிம் ஆகியோருக்கும் , பாரம்பரிய உணவு சமைத்து பங்களிப்பு செய்த, பிரியங்கா , அன்பரசன், ,அரங்கை நிர்வாகித்த அபிராமி , அர்ச்சனா, நடனத்தை வடிவமைத்த திருமதி ஹன்சுல் கனி, நடனமாடிய மாணவிகள், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிஞர் நாகூர் அப்துல் கையூம் என அனைவருக்கும் பாரதி தமிழ் சங்கத் தலைவர் திரு வல்லம் பஷீர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்தியப் பள்ளி நிர்வாகக்குழு செயலாளர் திரு ராஜபாண்டியன் உட்பட தமிழ்ச் சமூகத்து பிரமுகர்கள் பலரும் வருகை தந்து ஆதரவுக்கரம் நீட்டினர்.
No comments:
Post a Comment