BAHRAIN IN INDIA - இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டின்பேரில் பஹ்ரைனில் தடபுடலாக நடைபெற்ற இந்தியத் திருநாட்டின் கோலாகல கலாச்சாரத் திருவிழா

நேற்றைய தினம் (21.02.25) பஹ்ரைனிலுள்ள இந்தியத் தூதுவரகம் "Bahrain in India" என்ற கோலாகலத் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியத் திருநாட்டின் பல்வேறு மாநிலங்களை பிரதிபலிக்கும் சுமார் 28 சங்கங்கள் இதில் இடம்பெற்றன. தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பாரதி தமிழ்ச் சங்கம் இதில் கலந்துக் கொண்டு சிறப்பித்தது தமிழ்ப் பாரம்பரிய உணவுகள் ஒரு ஸ்டாலிலும், தமிழ்நாட்டு கைத்தறி துணிகள், சங்க இலக்கியங்கள், உறுப்பினர்கள் வரைந்த தமிழகத்துச் சிறப்புகளை சித்தரிக்கும் ஓவியங்கள், தமிழ்ப்பறை, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. கீழடி பற்றிய ஆய்வுகள் திரையில் ஓளிபரப்பு செய்யப்பட்டது. பல்வேறு நாட்டார், பல்வேறு சமூகத்தார் வருகை புரிந்த இத்திருவிழாவில் தமிழ்நாட்டின் பெருமைகளை விளக்குவதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். தமிழகத்து நாட்டுப்பாடல்கள் ஒலிபெருக்கியில் ஒலித்த வண்ணமிருந்தன. . திறந்த வெளியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்ட இம்மாபெரும் திருவிழாவில் பாரதி தமிழ் சங்கம் சார்பாக மாணவிகள் கலந்துக் கொண்ட வண்ணமயமான பரத நாட்டிய நிகழ்ச்ச...