தமிழ் வரலாற்றில் சிறந்த முதல் மூன்று கவிகளுள் பாரதியும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. தனது எழுத்துகளில் பல பரிணாமங்களை கொண்ட ஒரே கவி பாரதியே! இன்றைய வரலாற்று நாளில், இவர் புகழ் கூற நினைவுகொள்வோம்.
இன்று 129-வது பிறந்த நாள் விழா காணும் எமது மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றிய சில குறிப்புகள்.
பெயர்: சுப்பிரமணிய பாரதி.
இதரப் பெயர்கள்: மகாகவி, பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்.
பிறப்பு: டிசம்பர் 11, 1882.
இறப்பு: செப்டம்பர் 11 , 1921.
வாழ்ந்த காலம்: 38 ஆண்டுகள், 11 மாதங்கள், 1 நாள்.
பெற்றோர்: சின்னசாமி ஐயர், லக்ஷ்மி அம்மாள்.
மனைவி: செல்லம்மா.
திருமணம் நடந்த ஆண்டு: 1897.
மகள்கள்: சகுந்தலா, தங்கம்மாள்.
வாழ்ந்த இடங்கள்: எட்டையபுரம் (1882 - பிறந்த ஊர்), காசி (1898 முதல் 1902 வரை), மதுரை (1904, சிறிது காலம் - தமிழ் ஆசிரியராக), புதுச்சேரி (1908 முதல் 1918 வரை - முக்கிய மற்றும் பிரபல படைப்புகள் உதிர்த்த இடம்), கடையம் (1918 - முதல் 1920 வரை - மனைவி செல்லம்மாவின் கிராமம்), சென்னை (1921 - மறைந்த இடம்).
பரிணாமங்கள்: கவிஞர், சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், எழுத்தாளர், விடுதலை வீரர், தேச பத்தர், பெண்ணுரிமைப் போராளி.
அறிந்த மொழிகள்: தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம் மற்றும் ஆங்கிலம்.
No comments:
Post a Comment