Posts

Showing posts from December, 2013

இன்று மகாகவிக்கு பிறந்தநாள்

Image
மகாகவி பாரதியாரின் 131 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா.... என்று வறுமையான சூழ்நிலையிலும் கவிதை பாடியவர் மகாகவி பாரதியார். எழுத்துக்களால் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தவர் அந்த முண்டாசுக் கவிஞன். எட்டயபுரத்தில் பிறந்து ஏழ்மை நிலையில் இருந்தாலும் எழுத்தின் மூலம் ஆங்கிலேயருக்கு எதிரான கருத்துக்களை நாட்டு மக்களிடையே சொன்னவர் பாரதியார். தமிழ் வரலாற்றில் சிறந்த முதல் மூன்று கவிகளுள் பாரதியும் ஒருவர் என்றால் அது மிகையல்ல. தனது எழுத்துகளில் பல பரிணாமங்களை கொண்ட ஒரே கவி பாரதியே! இன்றைய வரலாற்று நாளில், இவர் புகழ் கூற நினைவுகொள்வோம். இன்று 129-வது பிறந்த நாள் விழா காணும் எமது மகாகவி சுப்பிரமணிய பாரதியை பற்றிய சில குறிப்புகள். பெயர்: சுப்பிரமணிய பாரதி. இதரப் பெயர்கள்: மகாகவி, பாரதியார், சுப்பையா, சக்தி தாசன். பிறப்பு: டிசம்பர் 11, 1882. இறப்பு: செப்டம்பர் 11 , 1921. வாழ்ந்த காலம் ...
Image