எதிர்வரும் வெள்ளிக்கிழமை மே 10-ஆம் தேதியன்று இந்தியன் கிளப் வளாகத்தில் பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் "உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்" கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதுசமயம் தமிழ்த்திரையுலகின் வளர்ந்துவரும் இசையமைப்பாளரும், பிரபல மேடை பாடகருமான துரைராஜன் அவர்கள் தன் குழுவினருடன் இசைவிருந்து அளிக்க உள்ளார். துரைராஜன் "கலைஞர்" தொலைக்காட்சி நடத்தும் "இன்னிசை மழை" மற்றும் "ஜெயா" தொலைக்காட்சியில் நடைபெறும் "மனதோடு மனம்" நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்டவர். மேலும் "சன்", "இமயம்" மற்றும் "ராஜ்" தொலைக்காட்சியிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிகழ்ச்சியில் இடம்பெற்று தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம். எஸ்.ஜானகி, பி.சுசிலா, P.B.ஸ்ரீனிவாஸ் உட்பட பிரபல பின்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து மேடைக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி "சொதப்பல் மன்னன்" என்ற படத்தையும் இயக்க உள்ளார். கடந்த வருடம் பாரதி தமிழ்ச்சங்கம் ஏற்...