பொங்கல் 2013
இந்த ஆண்டு பஹ்ரைன் நாட்டில் பாரதி தமிழ்ச் சங்கம் தைப்பொங்கல் நிகழ்ச்சியை கோலாகலமான விழாவாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய சங்க வளாகத்தில் காலை முதல் இரவு வரை முழுநாள் கொண்டாட்டமாக பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. வளாக அரங்கம் வாழைமரம் மற்றும் மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும். வண்ணக்கலவையில் வார்க்கப்பட்டிருக்கும் மாக்கோல வரைவுகள் வருவோரைக் கவரும் வண்ணமிருக்கும். பாரம்பரிய வேட்டியில் வீரமறவர்களும், பட்டுச் சேலையில் மாதர்குலப் பெண்டீரும், பாவடை தாவணியில் சிறுமிகளும் ஒய்யாரமாக வலம் வரும் கண்கொள்ளாக்காட்சி நம்மை ஊர் நினைவுகளுக்கு பின்னோக்கி அழைத்துச் செல்லும். காலை 10.30 மணிக்கு கோலம் மற்றும் பொங்கல் புதுப்பானை நிகழ்ச்சியுடன் சடங்குகள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம் முதலான ஆண்களுக்கான வீர விளையாட்டுக்களுடன், குழந்தைகளுக்கான பலதரப்பட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறும். ஏராளமான பரிசுகள் காத்திருக்கின்றன. பகற்பொழுதில்...