கடந்த வெள்ளிக்கிழமை மே நாலாம் தேதி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் நினைவாக பாரம்பரிய தமிழிசை நிகழ்ச்சி, இந்திய சங்கம் அரங்கத்தில், பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறியது. மறைந்த இசை மேதைக்கு சமர்ப்பணம் அளிக்கும் வகையில் அவர்களின் பிரபலமான பாடல்கள் பஹ்ரைன்வாழ் இசைக்கலைஞர்களால் ஒருங்கிணைந்து இசைக்கப் பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. சங்கச் செயலாளர் கபீர் அஹ்மது பாரதி தமிழ்ச் சங்கத்தை பற்றிய அறிமுகம் வழங்க, வரவேற்புரையை சங்கத்து கேளிக்கை செயலாளர் பெரியசாமி கோவிந்தன் வழங்கினார். பாரதி தமிழ்ச் சங்கத் தலைவர் முஹம்மது ஹுசைன் மாலிம் தனது இளம்பிராய நினைவுகளை எம்.எஸ்.அம்மாவின் சிறப்புகளை தொடர்புபடுத்தி சொற்பொழிவாற்றினார். இசைக்குயிலின் மேன்மைகளை அவரது பாடலின் அரும்பொருளை ஆய்வுச் செய்து ஸ்ரீமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களைப் பற்றிய அறிமுகவுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி வழங்க துணைபுரிந்த்த உபயதாரர் பற்றிய குறிப்புகளை துணைச் செயலாளர் சரவணன் வழங்கினார். பஹ்ரைன் நாட்டின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் திருமதி சங்கீதா ராம்பிரசாத், திருமதி...