ஒவ்வொரு ஆண்டும் வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் மிகச் சிறந்த முறையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பஹ்ரைன் நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற தமிழர்களின் பண்பாட்டு மையமான பாரதி தமிழ்ச் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை வருடந்தோறும் சீரும் சிறப்புமாக செய்து வருகிறது. பஹ்ரைன் நாட்டில் கிட்டத்தட்ட 60,000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் திரு.மோகன் குமார் அவர்கள் ஒரு தமிழர் என்பது பெருமைக்குரியதாகும். ஜனவரி 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை ஆதலால் பொங்கல் கொண்டாட்டம் இந்த தினத்தன்று கொண்டாட முடிவு செய்யப்பட்டது. விடியற்காலை மகளிர் அணியினர் மாக்கோலம் இட வண்ணமயத்துடன் பெங்கல் விழா களைகட்டத் துவங்கியது. காலை 10 மணிக்கு இந்திய சங்கத்தின் திறந்தவெளி அரங்கத்தில் ஆண்களுக்கான வீர விளையாட்டுகள், குழந்தைகள் மற்றும் மகளிருக்கான போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் போன்றவை இடம் பெற்றன. பாரதி தமிழ்ச் சங்கத்தின் பெண் உறுப்பினர்கள் ஒன்றுகூடி கூட்டுப் பொங்கல் வைத்து, இறைவனை வழிபட்டு, குறவையிட்டு "பொங்...