விளையாட்டுச் சாதனை அக்டோபர் 7 முதல் 14-ஆம் தேதி வரை பஹ்ரைனில் கோலாகலமாக நடைபெற்ற தமிழர் திருநாளின் ஓர் அங்கமாக, கடந்த வியாழக்கிழமை 13-ஆம் தேதி இந்திய சங்கம் திறந்தவெளி மைதானத்தில் "சென்னைக்கு விசில் போடு" என்று அறியப்பட்ட 20-20 மட்டை விளையாட்டுப் போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. "மும்பை இந்தியன்ஸ்" என்ற பெயரில் இந்திய சங்க கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும், "சென்னை சூப்பர் கிங்ஸ்" என்ற பெயரில் பாரதி தமிழ்ச் சங்க காளையர்களும் களமிறங்கினார்கள். பெரும் ஆர்பரிப்புக்கும், எதிர்பார்ப்புக்குமிடையே நடைபெற்ற இந்த போட்டியைக் காண பஹ்ரைன் நாட்டின் எட்டுத்திக்குகளிலும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் காட்டாற்று வெள்ளம் போல் வந்து குழுமியிருந்தனர். 10 ஓவர்கள் வீதம் இரண்டு இன்னிங்ஸ் விளையாடப்பட்டது. விவேக் தலைமையில் "மும்பை இந்தியன்ஸ்" அணியும், சிராஜ் தலைமையில் "சென்னை சூப்பர் கிங்ஸ்" அணியும் விளையாடினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கி மட்டையை கரம் பிடித்தனர். 46 ரன்கள் எடுத்து அனைவரும் ஆட்டம் இழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியது. எதிர்ப...