நடிப்புத்துறையில் அருஞ்சாதனை புரிந்துவரும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நீலு அவர்களுக்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா பஹ்ரைன் பாரதி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 15-05-2009 ஆம் தேதி, அல்-ரஜா பள்ளிக்கூட கலையரங்கில் “நீலுவின் நகைச்சுவை நேரம்” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீலு அவர்கள் வழங்கும் நகைச்சுவை விருந்து/ கலந்துரையாடல்/ மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறும். நீலுவைப் பற்றி சில வார்த்தைகள் : அறிமுகமே தேவையில்லாத அபூர்வ நடிகர் இவர். இவரது இயற்பெயர் R. நீலகண்டன். ஜூலை 26, 1936-ஆம் ஆண்டு பிறந்த நீலுவின் பூர்வீகம் கேரளாவிலுள்ள மஞ்சேரி எனும் ஊர். மற்றபடி படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். விவாகானந்தா கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் V.D.Swami & Co. என்ற புகழ்பெற்ற நிறுவனத்தில் பொது மேலாளராக 40 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நாடகத்துறை : நடிப்பு என்பது இவரது இரத்தத்தில் இரண்டறக் கலந்தது. நாடகத்துறையில் தனது ஏழாவது வயது முதற்கொண்டே நடிக்கத் தொடங்கியவர். நடிகர் ‘சோ’வின் விவேக் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் 50 ஆண்டுகள் இணைந்து ப...